தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 16,817 பணியாளர்கள் நியமனம் வெளியான அறிவிப்பு!
Anganwadi Recruitment 2025 Announcement
Anganwadi Recruitment 2025 Announcement: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கடந்த மார்ச் 14 ஆம் தேதி 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, மறுநாள் நடப்பு நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில், எம்.எல்.ஏ க்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “தமிழ்நாட்டில் 7,900 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 8,917 சத்துணவு சமையலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்” என அறிவித்துள்ளார். மேலும், “இந்த பணி நியமனங்கள் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.