நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 Apply Details Tamil
Madras High Court Jobs 2025
உதவியாளர், தனிச் செயலர் மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Madras High Court Jobs 2025: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Personal Assistant, Private Secretary மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Personal Assistant, Private Secretary மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 47 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Personal Assistant to the Hon’ble Judges – 28 பணியிடங்கள்
- Private Secretary to the Registrar General – 1 பணியிடம்
- Personal Assistant – 14 பணியிடங்கள்
- Personal Clerk – 4 பணியிடங்கள்
Madras High Court கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வயது வரம்பு:
01.07.2025ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Madras High Court ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Personal Assistant to the Hon’ble Judges – Pay Level-22: ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/-
- Private Secretary to the Registrar General – Pay Level-22: ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/-
- Personal Assistant (to the Registrars) – Pay Level-16: ரூ.36,400/- முதல் ரூ.1,34,200/-
- Personal Clerk (to the Deputy Registrars) – Pay Level-10: ரூ.20,600/- முதல் ரூ.75,900/-
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.