இந்திய அஞ்சல் துறையில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு 2025
Post Office Recruitment 2025 Supervisor
Post Office Recruitment 2025 Supervisor இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள டெக்னிக்கல் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
நிறுவனம்:
இந்திய அஞ்சல் துறை வேலை வகை: மத்திய அரசு வேலை காலியிடங்கள்: 01 பணியிடம்: இந்தியா ஆரம்ப தேதி: 06.03.2025 கடைசி தேதி: 15.04.2025
பணியின் பெயர்:
டெக்னிக்கல் சூப்பர்வைசர் சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து மெக்கானிக்கல் / ஆட்டோமொபைல் பொறியியலில் பட்டம் / டிப்ளமோ மற்றும் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அல்லது 2 வருட அரசு பட்டறையில் நடைமுறை அனுபவம். அல்லது
- உள் எரிப்பு இயந்திரங்களின் உற்பத்தி, பழுதுபார்ப்பு அல்லது பராமரிப்பு ஆகியவற்றிற்கான சில தொழிற்சாலை அல்லது பட்டறையில் 5 வருட நடைமுறை அனுபவத்துடன் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது.
தேர்வு முறை:
- போட்டி வர்த்தக தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.03.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2025
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்ப படிவத்தினை www.indiapost.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் (ஸ்பீட் போஸ்ட்/ ரெஜிஸ்டர்டு போஸ்ட்) மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
“The Senior Manager, Mail Motor Services, Kolkata, 139, Beleghata Road, Kolkata-700015
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு:
விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்
- விண்ணப்ப படிவத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.
இந்தத் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.