சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

TN 12th Result 2025 Link Result Check Out


ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது!.. RITES Recruitment 2024 Apprentices

ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது

RITES Recruitment 2024 Apprentices

RITES Recruitment 2024 Apprentices மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கு உள்ள 223 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும்  வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

RITES Recruitment 2024 Apprentices
RITES Recruitment 2024 Apprentices

1. பணியின் பெயர்: Apprentices

சம்பளம்: 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
  • பட்டப்படிப்பு பிரிவில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு மாதத்திற்கு ரூ.14,000 வழங்கப்படும்.
  • டிப்ளமோ பிரிவிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.12,000 வழங்கப்படும்.
  • ஐடிஐ பிரிவில் ஒரு மாத்திற்கு ரூ.10,000 வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை:

தொழிற்பயிற்சி பிரிவுகாலிப்பணியிடங்கள்
பட்டப்படிப்பு தகுதி தொழிற்பயிற்சி141
டிப்ளமோ தகுதி தொழிற்பயிற்சி36
ஐடிஐ பிரிவு தொழிற்பயிற்சி46
மொத்தம்223

கல்வி தகுதி: 

1 வருட தொழிற்பயிற்சிக்கு பொறியியல், பொறியியல் அல்லாத கலை மற்று அறிவியல் பட்டத்தாரிகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • பட்டப்படிப்பு பிரிவில் காலிப்பணியிடங்கள் இருக்கும் பாடப்பிரிவில் இன்ஜினியரிங் மற்றும் கலை மற்றும் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • டிப்ளமோ பிரிவிற்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • ஐடிஐ பிரிவில் சம்மந்தப்பட்ட ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தொழிபயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயதை நிறைந்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு: 

OBC – 3 years, SC/ST – 5 years

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • இந்த நிறுவனத்தில் இருக்கும் தொழிற்பயிற்சி இடங்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது. மெரிட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • அதாவது, கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பொதுப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 50 சதவீதம் மஎதிப்பெண்கள் என அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.12.2024

விண்ணப்பிக்கும் முறை 

தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் முதலில் https://nats.education.gov.in/student_type.php என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.அதனைத்தொடர்ந்து, https://www.rites.com/ என்ற இணையதளத்தில் உள்ள https://forms.gle/S9CFJ7YYx4JyKMgw5 என்ற கூகுள் படிவத்தை நிரப்ப வேண்டும்.மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கு உள்ள இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment