இந்து அறநிலையத்துறையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு எழுத்தர் வேலை -சம்பளம் ரூ. 33700
TNHRCE Recruitment 2024 Ezhuthar
TNHRCE Recruitment 2024 Ezhuthar திருவானைக்காவல் அருள்மிகு ஜம்முகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
எழுத்தர்
சம்பளம்
மாதம் Rs.10,700 – 33,700/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு
விண்ணப்பதாரர் 01.07.2024ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
03/08/2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
07/09/2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூபாய் 50 தரத்தில் விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் .மேலும் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையிடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்/ மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
“உதவி ஆணையர் /செயல் அலுவலர்,
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்,
திருவானைக்காவல்,
திருவரங்க வட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 620005”..