15,000+ காலிப்பணியிடங்களைக் கொண்ட மாபெரும் வேலை வாய்ப்பு!.. தகுதி: 8th/10th/12th/ITI/ விண்ணப்பிக்க உடனே முந்துங்கள்!..Chengalpattu District Employment Camp 2024

15,000+ காலிப்பணியிடங்களைக் கொண்ட மாபெரும் வேலை வாய்ப்பு!..

தகுதி: 8th/10th/12th/ITI/ விண்ணப்பிக்க உடனே முந்துங்கள்!..

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

Chengalpattu District Employment Camp 2024

Chengalpattu District Employment Camp 2024: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் அரசு உதவியுடன் அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழக அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையானது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊரக/ நகர்ப்புற வாழ்வாதாரத்தின் இயக்கத்தின் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை மையமானது செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 26/ 10 /2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை லஷ்மி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. மேலும் வேலைவாய்ப்பு பற்றியும் முழு விவரங்களையும் விரிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள தொகுப்பை படிக்கவும்.

Chengalpattu District Employment Camp 2024
Chengalpattu District Employment Camp 2024

 

காலியிடங்களின் எண்ணிக்கை

15,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நாளை வேலைவாய்ப்பு முகாமை செங்கல்பட்டில் நடத்த உள்ளது.

கல்வித் தகுதி

வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 8th/10th/12th/ITI/diploma/degree/nursing/pharmacy/engineering  முடித்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்

26/10/2024 At 9 AM.

முக்கிய தகவல்கள்

இதில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல், இலவச திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் முதலியவை நாளை நடைபெறுகிறது. மேலும், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ முதலியவற்றின் நகல் மற்றும் அசலுடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் இந்த வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று அம்மாவட்ட வாழ்வாதார திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

Leave a Comment