ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!.. DHS Recruitment 2024 Sivagangai

ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!..

DHS Recruitment 2024 Sivagangai

DHS Recruitment 2024 Sivagangai : சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குடும்பத்தின் (NHM) கீழ் தேவகோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை இயக்குனர் குடும்ப நலப்பணிகள் அலுவலகத்தில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 02 காலி இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும்  வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
DHS Recruitment 2024 Sivagangai
DHS Recruitment 2024 Sivagangai

1. பணியின் பெயர்:

Lab Technician Gr- III

சம்பளம்: 

மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி: 

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ கல்வி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பில் (ஒரு வருட காலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நல்ல உடல் திறன் நல்ல கண் பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்:

Programme cum Administrative Assistant

சம்பளம்: 

மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

01

கல்வி தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி, சரளமாக எம்எஸ் ஆஃபிஸில் பணிபுரிதல் சுகாதார திட்டம் / தேசிய ஊரக நலக்குழுமம் (NRHM) தொடர்பான அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு வருட அனுபவம், கணக்கியல் அறிவு (Accountancy), வரைவு எழுதும் (drafting skills) திறன் அகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.12.2024 மாலை 5 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தினை https://sivaganga.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

செயலாளர் / மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை. தொலைபேசி எண்: 04575 – 240524.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Lab Technician விண்ணப்ப படிவம் Click here
Programme cum Administrative Assistant விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

 

Leave a Comment