April 8 Local Holiday Erode
தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
April 8 Local Holiday Erode :தமிழகத்தில் புகழ்பெற்ற ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (ஏப்ரல் 8) நடைபெற உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் நாளை (ஏப்ரல் 8) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாரத் தொடக்க நாளான இன்று காய்கறி விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.